1. தேசிய மனித வளங்கள் மற்றும் வேலைவாய்ப்புக் கொள்கைக்கு இணங்க, பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளை உருவாக்கி, தொடர்புடைய நிறுவனங்களுக்குச் சமர்ப்பித்தல்.
2. இலங்கையில் மனித வளங்களை முகாமை செய்தல் மற்றும் வினைத்திறனாகப் பயன்படுத்துவது குறித்த மூலோபாய பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்குதல்.
3. தொழில் தேடுபவர்களின் தொழில்வான்மையை மேம்படுத்த டிஜிட்டல் சந்தைப்படுத்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல்.
4. மாற்றுத்திறனாளி இளைஞர்களின் தேவைகளுக்கு ஏற்ப வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் அவர்களை ஆட்சேர்ப்பதை ஊக்குவித்தல்.
5. வினைத்திறனுள்ள தொடர்பாடல் மற்றும் ஈடுபாட்டை உறுதி செய்வதற்காக, Facebook, YouTube, Twitter, LinkedIn மற்றும் TikTok உள்ளிட்ட திணைக்களத்தின் சமூக ஊடக தளங்களை முகாமைசெய்து பேணிவரல்.
6. திணைக்களத்தின் செயல்பாட்டு எல்லைக்குள் சர்வதேச அமைப்புகளால் நடத்தப்படும் செயற்றிட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களை அமுல்படுத்துவதை வசதிப்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைத்தல்.