Accessibility Tools

1. தொழில் வழிகாட்டல் சேவைகளை வழங்குதல்
  • தொழில் தேடுபவர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்களுக்கு தொழில் வழிகாட்டல் சேவைகளை வழங்குதல்.
2. தொழில்சார் கல்வி நிறுவனங்களுக்கான வெளிப்பாடு
  • பாடசாலை மாணவர்கள் தொழில்சார் கல்வியை வழங்கும் நிறுவனங்களைப் பற்றிய நுண்ணறிவுகளையும் வெளிப்பாட்டையும் பெறுவதற்கான வாய்ப்புகளை வசதி செய்து கொடுத்தல்.
3. தொழில் உலகம் அறிமுகம்
  • தொழில் தேடுபவர்களுக்கு தொழில் செய்யுமிடத்தின் சூழல்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் பற்றிய அனுபவங்களையும் அறிவையும் வழங்குதல்.
4. திறன் மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்கள்
  • தொழில் தேடுபவர்களின் திறன்கள், திறமைகள் மற்றும் ஆற்றல்களை மேம்படுத்தி அவர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட நிகழ்ச்சித் திட்டங்களை ஒழுங்குசெய்தல்.
5. தொழிற் சந்தை போக்குகள் மீதான அறிவுப் பகிர்வுசெய்தல்
  • பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதற்காக தனியார் துறையுடன் தொழிற் சந்தை தேவைகள் மற்றும் போக்குகள் மீதான நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்ளல்.
6. தொழில் வழிகாட்டல் வளங்களைப் இற்றைப்படுத்தல்
  • தொழில் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பதில் பொருத்தப்பாடு மற்றும் சரியானத்தன்மையை உறுதி செய்வதற்காக தொழில் வழிகாட்டல் கையேடுகளைத் தொடர்ந்து இற்றைப்படுத்துதல்.
7. "ஹசர" சஞ்சிகை வெளியீடு
  • தொழில் வழிகாட்டல் மற்றும் தொடர்புடைய தலைப்புகளில் கவனம் செலுத்தி, "ஹசர" சஞ்சிகையின் தயாரிப்பு மற்றும் வெளியீட்டை மேற்பார்வை செய்தல்.
FaLang translation system by Faboba