Accessibility Tools

1. சுயதொழில் ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டங்களை அமுல்படுத்துதல்.
  • சுயதொழிலை ஊக்குவிப்பதற்காக இலக்கு வைக்கப்பட்ட முயற்சிகளை உருவாக்கி அமுல்படுத்துதல், ஆர்வமுள்ள தொழில்முயற்சியாளர்களுக்கு நிதி மற்றும் நிதி சாராத ஊக்கப்படிகளை வழங்குதல்.
2. முறைசாரா துறைகளில் விருத்திசெய்யப்பட்ட வேலை நிலைமைகளுக்கான விழிப்புணர்வை மேம்படுத்துதல்.
  • முறைசாரா தொழில் துறைகளில் தனிநபர்களுக்கு கல்வி கற்பிப்பதற்கும் ஒத்துழைப்பதற்கும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்துதல், சிறந்த தொழில் நிலைமைகள், பாதுகாப்பு மற்றும் தொழில் தரநியமங்களுக்கு இணங்குவதை உறுதி செய்தல்.
3. ஈடுபாடு இல்லாத குழுக்களுக்கு சுயதொழிலை ஊக்குவித்தல்.
  • கல்வி, பயிற்சி அல்லது முறையான வேலைவாய்ப்பில் தற்போது ஈடுபடாத குழுக்களை சுயதொழில் வாய்ப்புகளைத் தொடர ஊக்குவிக்கவும் உதவவும் நிகழ்ச்சித் திட்டங்களை வடிவமைத்து ஊக்குவித்தல்.
4. வெற்றிகரமான தொழில்முயற்சியாளர்களுடன் பரிமாற்றத் திட்டங்களை வசதிப்படுத்துதல்
  • நிறுவப்பட்ட மற்றும் வெற்றிகரமான வணிகத் தலைவர்களின் அனுபவங்கள் மற்றும் நடைமுறைகளிலிருந்து ஆர்வமுள்ள தொழில்முயற்சியாளர் கற்றுக்கொள்ளக்கூடிய பரிமாற்ற முயற்சிகளை ஒழுங்கமைத்து அமுல்படுத்துதல்.
5. உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்துதல்.
  • சுயதொழில் மற்றும் தொழில்முயற்சியாளர் விருத்தியை வளர்ப்பதற்கு புத்தாக்கமுள்ள தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஊக்குவிப்பு மற்றும் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை உருவாக்குதல்.
FaLang translation system by Faboba