தொழில் தேடுபவர்கள் மற்றும் அவர்களின் தகுதிகள், திறன்கள் மற்றும் விருப்பத்தேர்வுகள் பற்றிய தரவுத்தளத்தைப் பேணிவரல்.
2. தனியார் துறை நிறுவனங்களுடன் ஈடுபாடு
கிடைக்கக்கூடிய தொழில் வெற்றிடங்களின் பதிவுகளைச் சேகரித்து பேணிவருவதற்காக தனியார் துறை நிறுவனங்களைப் பதிவு செய்தல்.
3. தொழில் பொருத்தப்பாடு மற்றும் அனுப்புதல்
தொழில் தேடுபவர்களை அவர்களின் தகுதிகள் மற்றும் திறன்களின் அடிப்படையில் வெற்றிடங்களுடன் பொருத்திப்பார்த்து, பொருத்தமான வேட்பாளர்களை நேர்காணல்களுக்கு அனுப்புதல்.
4. வேலைவாய்ப்பு கண்காணிப்பு மற்றும் பின்தொடர்தல்
விண்ணப்பதாரர்களின் வேலைவாய்ப்பு நிலைமையைக் கண்காணித்து, தேவைப்படும்போது தொழிலில் அமர்த்தலுக்குப் பிந்திய ஒத்துழைப்பை வழங்குதல்.
5. தொழில் வெற்றிட அறிவித்தல்கள்
பல்வேறு தொடர்பாடல் வழிகள் மூலம் பொருத்தமான வேலை வாய்ப்புகள் குறித்து தொழில் தேடுபவர்களுக்குத் தெரிவித்தல்.
6. பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை வசதிப்படுத்துதல்
வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த திறன் அபிவிருத்தி மற்றும் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களுக்கான அணுகலை வழங்குதல்.
7. வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல்
வெளிநாடுகளில் தொழில் தேடுபவர்களுக்கு ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பு வழங்குதல்.
8. மாவட்ட தொழிற் சந்தை நிகழ்ச்சிகள்
தொழில் வழங்குநர்களை தொழில் தேடுபவர்களுடன் நேரடியாக தொடர்புகொள்ளச்செய்ய மாவட்ட மட்டத்திலான தொழிற் சந்தைகளை ஏற்பாடு செய்து நடத்துதல்.